Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. புதிய வகையில் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!!

கடந்த சில நாட்களாகவே இணையத் திருடர்கள் புதிய வகையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பான செர்ட் இன் எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனில் எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது.

அதில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற செய்தியை அனுப்பி, இணைய இணைப்பின் மூலம் சரிபார்க்க சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் அந்த இணைய இணைப்பில் நுழைந்தால் அவர்களுடைய வங்கியின் இணையதளம் போன்றே இருக்கும் போலி இணைய தளத்திற்குள் நுழைவார்கள். அதன் பிறகு அவர்கள் பதிவு செய்யும் இன்டர்நெட் பேங்கிங் தகவல் உள்ளிட்டவை, மோசடிகாரர்களுக்கு கிடைத்துவிடும்.

அதன் பிறகு அவர்கள் உண்மையான வங்கி கணக்கில் நுழைந்து பணத்தை திருடி வருகின்றனர். குறுஞ்செய்தியில் வரும் இணைய இணைப்பின் இறுதியில் என்கிராக் என்ற வாசகம் உள்ளதா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறுஞ்செய்தியில் வரும் எந்த ஒரு இணைய இணைப்பையும் பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |