#AskSRK ஹேஷ்டேக்குகளில் தமிழ் ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ் குறித்து கேட்டதற்கு ஷாருக்கான் நச் என்று பதிலளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். ஷாருக்கானின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பதுதான் அவர் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
My friend. https://t.co/0WFjM1FLca
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019
ஆனாலும் ஷாருக்கான் அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களை சந்தித்துவருகிறார். இந்நிலையில், #AskSRK ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களை சந்தித்த ஷாருக், ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
Awesome https://t.co/SLap0VhEpu
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019
அதில் தமிழ் ரசிகர்கள் சிலர் விஜய், அஜித், தனுஷ் புகைப்படங்களை பதிவு செய்து, இவர்களைப் பற்றி ஒரு வரியில் உங்களின் பதில் என்ன என்று கேட்டனர். இவர்களின் கேள்விக்கு ஷாருக்கான், விஜய் அற்புதம். அஜித் எனது நண்பர். தனுஷ் நான் நேசிக்கும் நபர் என நச் என்று பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதிலை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
I love him. https://t.co/emq18i0xoM
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019