4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகே பி.எஸ்.என்.எல் வளாகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்துள்ளார்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோலுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் எனவும், பிளாட்பார கட்டணத்தை கைவிட வேண்டும் போன்ற 4 அம்சக் கோரிக்கைகளை அரசிற்கு முன் வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள், தாலுகா தலைவர், செயலாளர், என பலரும் கலந்து கொண்டனர்.