திருமணம் நடைபெற்று 4 மாதங்களில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரணி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் அகிலாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது ஆடி மாதம் என்பதனால் அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 4 – ஆம் தேதி தனது வீட்டில் அகிலா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் அகிலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அகிலாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.