Categories
மாநில செய்திகள்

செல்போனில் புக் செய்தால் போதும்.. வீடு தேடி வரும் டீசல்…. வாவ் சூப்பர்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து பொருட்களையும் நாம் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் முறை வந்துவிட்டது. அந்தவகையில் தற்போது டீசல் கூட வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் போன் மூலம் டீசல் புக் செய்தால் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போன் செய்தால் வாகனம் மூலம் டீசல் கொண்டுவந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. பள்ளிக்குப்பத்தில் உள்ள திருவருள் பெட்ரோல் பங்கில் போன் செய்தால் இருப்பிடங்களுக்கு சென்று 20 லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் வரை டீசல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.  வரும் நாட்களில் 25 பங்குகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |