Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. மதுபாட்டில்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விராலிமலை பகுதியில் வசிக்கும் துரைராஜ் சண்முகம் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 62 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |