தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் முதல் 50 சதவீத மாணவர்களும், அடுத்த நாள் 50 சதவீத மாணவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.