Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “மனைவி அதிக பாசமாக இருப்பார்”… பண வரவு அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். உங்களுடைய நிதிநிலை இன்று உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு இன்றைய நாள்  வேலை செய்வது சிறப்பு. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க கூடுதலாக தான் உழைக்க வேண்டியதாக இருக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு செலவு இருக்கும். இன்று உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவார். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பணவரவு இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை இன்று வாங்க கூடும்.

மனைவி அதிக அன்பு பாசம் கொள்வார். விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள்.  நேற்றைய பணிகள் இன்றும் தொடரும். ஆலய வழிபாடு அமைதியை கொடுக்கும். இன்று பணம் வரவு அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்காக வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற கைக்குட்டை பயன்படுத்துவது சிறப்பு. உங்களுக்கு அது வெற்றி வாய்ப்புகளை தேடி கொடுக்கும். அதே போல நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் எழுந்தால் மிகவும் சிறப்பு. அதாவது அன்றைய நாளை அம்மன் வழிபாட்டுடன் தொடங்குவது நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பானதாக்கி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்டமான எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |