Categories
உலக செய்திகள்

“ஆடைகள் புதிதாக வாங்க மாட்டேன்!” பிறர் பயன்படுத்தியது தான்.. -சூழலியல் செயற்பாட்டாளர்..!!

ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், தான் புதிய ஆடைகளை வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது என்று கூறியுள்ளார்.

வோக் ஸ்கேண்டினாவியா என்ற இதழின், அட்டைப்படத்தில் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க் மிகப் பெரிதான ஆடையை அணிந்தபடி வனப்பகுதியில் குதிரையை வருடிக் கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இது தொடர்பில் அவர் கூறியதாவது, “நான் புதிய உடைகள் வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது.

எனினும், அந்த உடைகளும் முன்பே பிறரால் பயன்படுத்தப்பட்டவை தான். எனக்கு தேவைப்படும் பொருட்களை, நான் எனக்கு தெரிந்தவர்களிடம் தான் வாங்கிக்கொள்கிறேன். புதியதாக வாங்கவில்லை. கலாச்சாரம் வேகமாக மாறி வருகிறது. ஆடைகளை அணிவதால் உண்டாகும் சந்தோஷத்திற்காக ஆடைகள் வாங்குவது மற்றும் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழலின் அவசர நிலையில், முக்கியமான பங்கு, உடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |