90களில் ஆசை நாயகியாக இருந்த சுவலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ஆசை எனும் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சுவலட்சுமி. அவர் நடித்த இந்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து மற்றொரு முன்னணி நடிகரான விஜய் உடன் இணைந்து லவ் டுடே, நிலாவே வா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
பின்பு ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் சூலம் என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாது இருந்த நடிகை சுவலட்சுமி ஆராய்ச்சியாளர் ஸ்வாகடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை சுவலட்சுமியின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.