குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வினுக்கு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்த முடிந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகை, நடிகர்களாக வலம் வருகின்றனர்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகர் அஷ்வின். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அதன் படி ‘மீட் க்யூட்’ எனும் தலைப்பில் வெளியான ஒரு வெப் சீரியல் அஷ்வின் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்துள்ள இப்படத்தில் அஷ்வினுடன் இணைந்து சுனைனா, அடா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா, வர்ஷா பொல்லம்மா என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ரேவதி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.