தாய் இறந்தது கூட தெரியாமல் மூன்று வயது மகன் அவரின் சடலத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்யும் காட்சியில் காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது.
தெலுங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சோம சேகர், திவ்யா என்ற தம்பதியினருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எம்பிபிஎஸ் படித்த இருவரும் திருமணம் செய்து உயர் படிப்புக்காக துபாய்க்கு சென்றவர். இவர்களுக்கு ஞானி விராத் என்ற 3 வயது மகன் உள்ளான். இதற்கிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மகன் மற்றும் மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு சேகர் மட்டும் துபாய் சென்று உள்ளார்கள். திவ்யாவுக்கும் சேகருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் உறவினர்கள் ஈமச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது குழந்தை தாய் அருகே சென்று தன்னுடன் எழுந்து விளையாடுமாறு தட்டி எழுப்பிய சம்பவம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.