இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்துள்ளது.
அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த டாஸ் முடிந்து இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி , அணியில் ஒரே ஒரு மாற்றம் தான் செய்யப்படுகிறது என்றும் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா விளையாடுகிறார் என்று அறிவித்தார்.