Categories
உலக செய்திகள்

எங்களை கைவிட்டு விடாதீர்கள் …. நட்சத்திர கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு ….!!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நேட்டோ படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்களின்  ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. அங்கு தலிபான்கள்  பொதுமக்கள் ,அரசு படைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவர்  மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதோடு ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தலைநகரை கைப்பற்றி வரும் தலிபான்கள், ஒரு வாரத்தில் மட்டும் 7-வது தலை நகரையும் கைப்பற்றி உள்ளன. அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் வசித்துவரும் இந்தியர்களை குறிவைத்தும் தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக நாடு திரும்பும்மாறு  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷித் கான் தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலக தலைவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘ இந்தத் தாக்குதலால் குழந்தைகள் ,பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் தினந்தோறும் பலியாகின்றன. அதோடு ஆயிரக்கணக்கான குடும்பங்களும் வெளியேறிவிட்டன .மேலும் தாக்குதலில் வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. ஆப்கன் நாட்டை அழிப்பதை நிறுத்துங்கள்’,என்று தெரிவித்துள்ளார். நாட்டின் 65% பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில் தங்கள் நாட்டில் ஆப்கானிஸ்தான் தலைவர்கள் போராட வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்

Categories

Tech |