தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி மற்றும் முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் பள்ளிகளில் தீவிரமாக கண்காணிப்பை நடத்த வேண்டும். வேலை செய்யும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories