Categories
உலக செய்திகள்

அமெரிக்கப் படைகள் “கட்டாயமாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்”…. திட்டவட்டமாக கூறிய அதிபர்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தங்கள் நாட்டின் படைகள் வெளியேறுவதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பான முடிவில் தங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, கடந்த 20 வருஷத்தில் 1 ட்ரில்லியன் டாலர்களை இதற்காக செலவழித்ததோடு மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் தங்களிடமிருந்து இழந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |