ஆப்கானிஸ்தானில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை தலிபான்கள் விடுவித்தது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் 6 நகரங்களிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை விடுவித்துள்ளார்கள். அவ்வாறு பயங்கரவாதிகள் விடுதலை செய்த கைதிகளில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ஆயுத கொள்ளையில் ஈடுபட்டவர்கள் போன்றோரும் அடங்குவார்கள்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தலிபான்களை பிடித்த பிறகு அவர்கள் விடுதலை செய்த கைதிகள் மீண்டும் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.