Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்குவாரிகள் இயங்க எதிர்ப்பு…. விவசாயிகளின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

புதிய கல்குவாரிகள் அமைக்க தடை செய்ய கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இருக்கன்துறை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 10 – க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக 2 கல்குவாரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனையடுத்து ஆழம் அதிகமாக தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் எனவும், புதிதாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Categories

Tech |