விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் சலீம், திமிருபிடிச்சவன், எமன், பிச்சைக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன்-2 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் .
இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் போக்ராவின் இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். மேலும் இந்த படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சலீம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது . விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .