Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் அதர்வா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் அதர்வா மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற திரைப்படம் பரதேசி. இந்த படத்தில் வேதிகா, சாய் தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ரெட் டீ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

This young hero turns villain in Bala's next movie? - Tamil News -  IndiaGlitz.com

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் அதர்வா குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Categories

Tech |