பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வி அதே ஊரில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து அன்புச்செல்வி சண்முகவேலுடன் திடீரென பேச மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் மது அருந்திவிட்டு அன்புச்செல்வி வீட்டிற்கு வந்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அன்புச்செல்வி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த சண்முகவேலை கைது செய்துள்ளனர்.