Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்… நடந்த விபரீதம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுந்தரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரப்பு மற்றும் வாய்க்கால் சீரமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் இணைந்து  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் அருகில் இருக்கும் மரத்தடியில் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து மாலை நேரத்தில் பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் ஜெயக்கொடி எழுப்ப முயன்ற போது அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைவாக வந்த காவல்துறையினர் ஜெயக்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  அதன் பின் கடந்த 9-ஆம் தேதி தடுப்பு ஊசி போட்டதினால் அவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் பணிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணத்தினால் அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |