நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Exclusive latest video of #Thala #Ajithkumar 🏆 #Valimai pic.twitter.com/8pjFDB7tlv
— TRENDS AJITH (@TrendsAjith) August 12, 2021
இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் தமிழக அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.