முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த கேல் ரத்னா விருதினை பெயரை பிரதமர் மோடி மாற்றி அறிவித்தார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். மேலும் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், மராட்டிய அரசு தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கு வித்திட்ட ராஜீவ் காந்தி பெயரில் விருது வழங்க முடிவு செய்துள்ளது. 30 ஆண்டுகள் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கிவந்த கேல்ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப் பட்டதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.