Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நிகழ்ந்த சம்பவம்… 8 பேர் இணைந்த கும்பல் கைது… காவல்துறையினரின் அதிரடி செயல்…!!

தொடர்ந்து நடந்த திருட்டால் அதில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக வழிப்பறி மற்றும் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல நடவடிக்கைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்பலூர் பகுதியில் வசிக்கும் மாமலைவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து இது பற்றி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

அப்போது தனிப்படை காவல்துறையினர் தும்பேரி கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த  மோட்டார் சைக்கிளில் நபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு விசாரணை செய்த போது அவர்கள் வினோத்குமார், அபினேஷ், கார்த்திகேயன், காமேஷ் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ராமநாயக்க பேட்டை மற்றும் அம்பலூர் பகுதிகளில் கொள்ளையடித்து இருந்தது நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். பிறகு அவர்கள் அளித்த தகவலின் படி சக்திவேல், லோக, பசுபதி, முரளி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |