தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பல மாவட்டங்களில் தற்போது தொற்று மீண்டும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றன. கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே நிலைமை நீடித்தால் தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அதிகாரத்தை மாவட்ட நிர்வாகங்கள் கையில் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். அதன்படி குறிப்பிட்ட மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு, கடைகளின் நேரம் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோய் தொற்று விரைவில் கட்டுக்குள் கொண்டு வரும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.