முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் காவல்துறையினர் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் தலா 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.