வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் பாமக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சாதிரீதியாக திரும்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காது.
என்பதால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக ஏமாற்றி வார்த்தைகளை கூறுகிறார் என விமர்சித்தார். ராமதாஸின் விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சரும் திமுகவைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக திமுக கட்சி மீது ராமதாஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.