ஜெர்மனியில் ரயில் ஓட்டுனர்கள் நேற்றிலிருந்து பணி நிறுத்தம் செய்ததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் Leipzig, Dresden மற்றும் பெர்லின் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள், பணி நிறுத்தத்தால் எரிச்சல் அடைந்துள்ளனர். தற்போது தான் மீண்டும் சுற்றுலா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பணி நிறுத்தம் தவறானது என்று ஒரு பயணி கூறியிருக்கிறார்.
மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பணி நிறுத்தம் செய்தவர்களை, சிலர் பரிதாபமாக பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 61% மக்கள் பணி நிறுத்தம் செய்தவர்களை ஆதரித்துள்ளார்கள். அதாவது ரயில் ஓட்டுனர்கள் சம்பளத்தை அதிகரிக்க கோரியும், சிறந்த பணி சூழல் வேண்டுமென்றும் தான் பணி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நிறுத்தம் நாளை மதியம் 2 மணி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.