Categories
சினிமா தமிழ் சினிமா

முத்தையா- கார்த்தி இணையும் புதிய படம்… ஹீரோயின் இவரா?… வெளியான செம அப்டேட்…!!!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் குட்டி புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இதன் பின் முத்தையா இயக்கத்தில் வெளியான கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது இயக்குனர் முத்தையா மீண்டும் கார்த்தியுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.

 

Aparna Balamurali-Suriya: I looked at Suriya sir as a superstar, but he  really surprised me: Aparna Balamurali | Malayalam Movie News - Times of  India

மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |