தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஏதுவாக வார நாட்களில் இயக்கப்பட்டு வந்த 114 மின்சார ரயில்களின் எண்ணிக்கை 140 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டு வந்த 76 மின்சார ரயில்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்த்தப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.