கண் சிகிச்சைக்காக வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் சிங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். இந்நிலையில் சிங்கராஜா சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் சிங்கராஜாவை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிங்கராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.