Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பயங்கரவாதம்… மேலும் மூன்று மாகாண தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்த காணொலியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடுமட்டுமில்லாமல் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆறு நாட்களில் மட்டும் எட்டு மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது காபுலை கைப்பற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அதிகாரிகள் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் ஒரு உள்ளூர் ராணுவ தலைமையகத்தையும், நாட்டின் மேலும் மூன்று மாகாண தலைநகரங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |