குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கு வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
தமிழில் சில குறும்படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வின் . இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அஸ்வினுக்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மீட் க்யூட் என்ற வெப் தொடரில் அஸ்வின் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் நானி தயாரித்துள்ள இந்த வெப் தொடரை அவரது தங்கை தீப்தி இயக்கியுள்ளார். இதில் அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, வர்ஷா பொல்லம்மா, சுனைனா, சஞ்சிதா ஆகிய 6 நடிகைகள் நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், ரேவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.