பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் நடைபெற்ற எக்விட்டர் நாட்டில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தென்னமெரிக்க நாடான எக்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் ஈக்வடாரில் அதிபர் லெனின் மோரைரோ அரசுக்கு எதிராக சிக்கன நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். அப்போது தடுப்புகளை அகற்றுவதோடு போலீசார் மீது கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.இதேபோல் மசாஜீ நகரிலும் ஏராளமானோர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாகனங்களில் ஊர்வலமாக வந்த நூற்றுக்கணக்கானோர் சாலைகளில் டயர்களை கொளுத்தியும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியும் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்த போதிலும் விலை உயர்வை திரும்ப பெற அந்நாட்டு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.