- பனைதொழிலாளர் வீட்டில் சிலிண்டர் வெடித்தால் உள்ளே இருந்த பணம் பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள வெட்டுக்காடு கிராமத்தில் திருமணி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திட்டங்குளம் பகுதியில் குடிசை அமைத்து பனைமரங்களை குத்தகைக்கு எடுத்து பனைதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணி செல்வம் வேலைக்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவியும் வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறி குடிசை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல்அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் குடிசை எரிந்ததில் உள்ளே இருந்த 20,000 ரூபாய், வீட்டில் இருந்த பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி புத்தகம் என அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சாயல்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.