Categories
உலக செய்திகள்

கரடினு நினைத்தேன்…. மனிதனை சுட்ட பணக்காரர்…. கைது செய்த போலீஸ்….!!

கரடி என தவறாகப் புரிந்து கொண்டு மனிதரை சுட்டு கொன்ற பணக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஒஸெர்னோவ்ஸ்கி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி இகோர் ரெட்கின் என்கிற பணக்காரர் ஒருவர் கரடி என தவறாக நினைத்து 30 வயதுடைய Andrei Tolstopyatov என்ற நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ள Andrei Tolstopyatovவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் இகோர் ரெட்கின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றம் சாற்றப்பட்ட இகோர் ரெட்கின் ரஷ்யாவில் உள்ள செல்வந்தர்களில் இவரும் ஒருவராவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் இகோர் ரெட்கினிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இகோர் ரெட்கின் கூறுவதாவது “அந்த பகுதியில் குப்பை போடும் இடத்தில் கரடி சுற்றித்திரிவதாக கேள்விபட்டேன். இதனால் கரடியை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கியால் சுட்டேன். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகுதான் நான் சுட்டது கரடியல்ல அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் என்பதை அறிந்தேன். இந்த குற்றத்திற்காக நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை மறுக்காமல் நான் ஏற்றுக் கொள்வேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இரண்டு மாதங்களுக்கு அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |