ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஸ்பை கேமரா மூலம் மோசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டனில் Bank Underground என்ற ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில்வே நிலையத்தில் இருந்த மின்சார படிக்கட்டில் ஒரு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Martin Stone என்ற 62 வயதுடைய நபர் ஸ்பை கேமரா மூலம் அவரை மோசமாக படம் பிடித்துள்ளார். இதனை போலீசார் கண்காணிப்பு கேமராவில் கவனித்து அந்த நபரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது ” Martin Stone அந்தப் பெண்ணுக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்துள்ளார். இது ரயில் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலும் நாங்கள் Martin Stoneயிடம் விசாரணை நடத்திய போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நாங்கள் Martin Stoneனை கைது செய்து கடந்த 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Martin Stoneக்கு 10 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்” என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் கூறுகையில் “Martin Stone 10 நாட்கள் சிறை தண்டனைக்குப் பிறகு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். மேலும் போலீசார் Martin Stoneனிடம் இருந்த ஸ்பை கேமரா, மெமரி கார்டு மற்றும் இரண்டு மொபைல் போன்கள் உட்பட அனைத்தையும் கைப்பற்றி அப்புரவுப்படுத்த வேண்டும். ” என உத்தரவிடப்பட்டுள்ளது.