Categories
மாநில செய்திகள்

புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட்நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக தேர்தலின்போது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதோடு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  மேலும் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் தமிழகம் முழுவதும் 7,19,895 நபர்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

அதில் மே மாதத்தில் 1,26,414 நபர்களும், ஜூன் மாதம் 1,57,497நபர்களும், ஜூலை மாதத்தில் 2,61,529 நபர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக தென் சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் தென் சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49920 நபர்கள் விண்ணப்பித்ததில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு,6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில், 15687 நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு ,2041 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது அதேபோல் கடந்த மூன்று மாதங்களில் கோயமுத்தூர் மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் அதிகம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

Categories

Tech |