தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பயனர்களும் அதிகம்.
அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் நிறுவனம் தனது டெக்ஸ்டாப் ஆப் மற்றும் வெப் பிரவுசரில் புகைப்படங்களை எடிட் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் டெக்ஸ்டாப் செயலியில், “drawing tools” என்ற ஆப்ஷன் மூலம் போட்டோ எடிட்டிங் டூலை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு புகைப்படத்தை பதிவேற்றிய உடன் வாட்ஸ் அப்பில் மேலே தெரியும் நியூ ட்ராயிங் அல்லது எடிட்டிங் டூல்களை தேர்வு செய்து எடிட் செய்யலாம். புதிய வெர்ஷனில் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.