Categories
தேசிய செய்திகள்

வருமான வரித் தாக்கல்….. பணம் திருப்பி தரப்படும்….. வெளியான நிம்மதியான நியூஸ்….!!!

வருமான வரி தாக்கலின் போது தவறாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமான வரி தாக்கல் செய்த போது மென்பொருள் கோளாறு காரணமாக கூடுதல் வட்டி மற்றும் தாமத கட்டணம் செலுத்தியவருக்கு கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் வரி செலுத்துவதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு கூடுதல் வட்டியும், தாமதக் கட்டணம் வசூல் செய்யப்பட்டதால் பலர் புகார் அளித்தனர். மென்பொருள் கோளாறு காரணமாக இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மென்பொருள் கோளாறு ஆகஸ்டு 1ஆம் தேதி சரி செய்யப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரி செலுத்துபவர்கள் மென்பொருளின் லேட்டஸ்ட் வெர்ஷனை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கூடுதல் வட்டி மற்றும் தாமத கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப தரப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |