இந்தியாவில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டில் உள்ள முகவரியை இணையதளத்தில் மாற்றும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு முகவரி மாற்றம்:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை தேவைப்படுவோர் உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு ரேஷன் கார்டு பெறலாம். விண்ணப்பிப்பவருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டை மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் மளிகை மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும். இது முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது
ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுகின்றனர். தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகிறது. ரேஷன் கார்டு ஒவ்வொருவரின் இருப்பிட சான்றாக உள்ளது. பல்வேறு இடங்களில் தொழில் ரீதியான மற்றும் வங்கி சம்மந்தப்பட்ட செய்ல்பாடுகளில் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு பரிந்துரை செய்யப்படுகிறது. தற்போது இணையம் மூலம் ரேஷன் கார்டின் முகவரியை மற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு முகவரி மாற்றும் வழிமுறைகள் :
- முதலில் www.pdsportal.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு முகப்பு திரையில் மத்திய அரசு என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
- அதில் ரேஷன் கார்டு முகவரி மாற்றும் படிவத்தை தேர்ந்தெடுக்கவும். யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்நுழையும்.
- தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் ‘சமர்ப்பி’ என்று கிளிக் செய்யவும்.
- பிறகு உங்கள் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்யப்படும்.
- பிறகு தேவை என்றால் மாற்றம் செய்ததை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.