Categories
மாநில செய்திகள்

கெத்தா, மாஸ்ஸா…. இணையத்தில் வைரலாகும்…. திருமாவின் போட்டோ சூட் புகைப்படம்…!!!

கொரோனா  காலத்தில் நடிகர் நடிகைகள் தங்களை போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் . அதிலும் இன்ஸ்டாகிரம் வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கவர்வதை ஒரு புது யுக்தியாகவே உள்ளது. ஆனால் அரசியல் கட்சித்தலைவர்கள் போட்டு சூட்  நடத்துவது ஒரு அரிதான விஷயம் ஆகும். அதிலும் சமூக வலைதளங்களில் அதை பகிர்வது என்பது எதிர்பாராத ஒன்றுதான்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் ஊதா நிற கோட் சூட் அணிந்து திருமாவளவன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவருடைய புகைப்படங்களை விசிக  கட்சியினர் மற்றும் திருமாவளவனின் ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |