Categories
உலக செய்திகள்

குழந்தைகள் திறந்தவெளி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்…. சவுதி அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு….!!

சவுதியில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களுடன் பங்கேற்கலாம் என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சவுதியில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா குறித்த எந்தவிதமான தடுப்பூசியையும் செலுத்தி கொள்வதற்கு தேவையில்லை என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி வெளிப்புறங்களில் அதாவது திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களுடன் சென்று கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் திறந்தவெளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு காய்ச்சல் போன்ற எந்தவிதமான அறிகுறியும் இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

மேலும் குழந்தைகளை சோதனை செய்யும்போது Tawakkalna என்னும் செயலியில் அவர்களுக்கு தொற்று இல்லை என்றும், அவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இல்லை என்றும் காட்ட வேண்டும் எனவும் சவுதியின் பொதுப் பொழுதுபோக்கு ஆணையம் தெரிவித்துள்ளது. இது போன்ற வெளிபுற நிகழ்வுகளில் 40 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |