Categories
உலக செய்திகள்

என்ன…! 3 வயது குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனையா…? இஸ்ரேல் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

இஸ்ரேலில் 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் எதிர்வரும் வாரத்திலிருந்து 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். மேலும் ஹோட்டல்கள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கும் மேலான நபர்களுக்கு கொரோனா குறித்த கூடுதல் தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கான திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனையடுத்து தற்போது கூடுதல் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கான வயது வரம்பை குறைப்பதற்கு அந்நாட்டின் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |