செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பயனர்களும் அதிகம். அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் ios- இல் இருந்து ஆண்ட்ராய்டு போன்களுக்கு எளிதில் போட்டோ, வீடியோ மாதிரியான மீடியாக்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைக்கு சாம்சங் போஸ்டபில் போன் பயன்படுத்துகின்ற பயனர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். வரும் நாட்களில் மற்ற ஸ்மார்ட் போன்களிலும் இந்த வசதியை பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.