தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய விரும்பும் மாணவர்கள் rte.tnschool.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 சட்டப்பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.