Categories
தேசிய செய்திகள்

பீகார் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கி 5 பேர் பலி…!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி பூனம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடிஹார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநில பேரழிவு மேலாண்மைத் துறையின் கூற்றுப்படி, பீகாரில் உள்ள 13 மாவட்டங்களில், கடிஹார் – ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வெள்ளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா நான்கு லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |