வாக்குப்பதிவு எந்திரங்களை ஆட்சியர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரான மோகநாத ரெட்டி சோதனை செய்துள்ளார்.
1,600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 4,600 எந்திரங்களை ஆட்சியர் அரசியல் பிரமுகர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். இந்த சோதனையின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர், நகராட்சி கமிஷனர் என பல அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.