Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற சிறுமி…. இருவரால் நேர்ந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மழவங்கரனை கிராமத்தில் அகமது ஜலில் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலையில் மல்லிகை வியாபாரமும், மாலையில் ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகின்றார். இதே போன்ற அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்   பள்ளிகள் திறக்காத காரணத்தினால் மாடு மேய்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது அகமது ஜலில் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை பார்த்த அதே பகுதியில் வசிக்கும் லாரி டிரைவரான அலாவுதீன் என்பவர்  மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாயார் இது குறித்து விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ் அகமது ஜலிலை கைது செய்ததோடு லாரி டிரைவரான  அலாவுதீன் என்பவரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |